APKNEWS images

Discover Best APKNEWS Images of World

#food #travel #sports #news #april #tuesday

ஏழை அப்பாவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு… தமிழ்நாடே எதிர்பார்த்த தீர்ப்பு… 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து மரியாதைக்குரிய நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு அளித்துள்ளார்… இந்த தீர்ப்பின் மூலம் இனிமேல் எந்தவொரு தனி நபரும் இப்படிப்பட்ட தவறான சிந்தனைக்கு போவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என நம்புகிறோம்… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #nirmaladevi #judgement #sruvilliputhur

4/30/2024, 3:36:19 PM

ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில் பங்குனித்திருவிழாவின் நான்காம் நாளான இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது… இன்று திருநகரம், அழகாபுரித்தெரு மக்களின் மண்டகப்படி, எனவே அந்த பகுதி மக்களுக்கு வீதி உலா வந்து அம்மன் காட்சியளித்தார்… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #thiruviza #4thday

4/26/2024, 7:12:37 PM

அருப்புக்கோட்டையில் காலையில் இருந்தே வெயில் உக்கிரமாக அடித்து வந்தது… தற்போது இடிச் சத்தம் கேட்பது மக்களிடையே சிறிது மகிழ்ச்சியை தந்துள்ளது… வெறும் இடியோடு இல்லாமல் நல்ல மழை பெய்தால் மண் குளிர்வதோடு மக்கள் மனதும் குளிர்ச்சியாக இருக்கும்… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #rainy #weather #enjoy #climate

4/26/2024, 1:06:00 PM

ДЕНЬ ТАМБОВСКОГО ПОЛЯ 28-29 июня 2024 Тамбовский муниципальный округ, с. Лысые Горы ‼️На сайте выставки по ссылке https://pole68.ru/members/promo.html в разделе "для участников" появилась возможность скачать готовые бесплатные рекламные материалы, которые Вы можете использовать для рассылки и для приглашения гостей. Ждём вас на наших мероприятиях www.vfcenter.ru

4/26/2024, 11:48:24 AM

தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கிறது, பல மாவட்டங்களில் சதம் அடித்துக் கொண்டிருக்கிறது… குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடுமையான வெயில் அடிக்கிறது, இந்த மாதிரி கோடைக்காலத்தில் அரசியல் கட்சிகள் சார்பாக நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்குவதை நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்த முறை தற்போது வரை பெரிய அரசியல் கட்சிகள் செய்யாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது… அருப்புக்கோட்டையில் இருக்கும் அரசியல் கட்சிகளே நீர் மோர் பந்தல் வைத்து பொதுமக்களின் தாகத்தினை குறைக்க முயற்சி செய்யலாமே. இதை Aruppukottai Official வேண்டுகோளாக வைக்கிறது… ஒரு வேளை தேர்தல் விதி அமலில் இருப்பது தான் காரணமா என தெரியவில்லை… தேர்தல் விதி காரணம் என்றால் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்க வேண்டும் என Aruppukottai Official கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #summerdrinks🍹 #Water #political

4/26/2024, 10:53:24 AM

நேற்று வியாழக்கிழமையை முன்னிட்டு அருப்புக்கோட்டை காந்திநகரில் இருக்கும் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்… பின்பு நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் பக்தர்கள் அனைவரும் மற்றவர்களுக்காக வேண்டிக்கொண்டனர்… பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது, இரவு கேசரியும் பிஸ்கட்டும் வழங்கப்பட்டது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #saibaba #thursdayvibes #omsairam

4/26/2024, 5:02:45 AM

Go Magic 😁💙🏀 A lil faith goes along the way #nbaplayoffs #orlando #orlandomagic #apknews #apkmedia #news #sports #florida #ballysports

4/25/2024, 5:32:02 PM

Go Magic 😁💙🏀 A lil faith goes along the way #nbaplayoffs #orlando #orlandomagic #apknews #apkmedia #news #sports #florida #ballysports

4/25/2024, 5:31:56 PM

பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என கடந்த சில நாட்களாக வாட்சப்பில் ஒரு செய்தி உலவி வந்தது… இந்த சூழ்நிலையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு இது முற்றிலும் வதந்தி எனவும் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லையென அறிக்கை வெளியிட்டுள்ளது… மக்களே கவனமா இருங்க… இந்த மாதிரி வதந்திகளை நம்பாதீங்க, பரப்பாதீங்க என Aruppukottai Official கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #beaware #fakenews #alert

4/25/2024, 11:10:53 AM

இன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். @nizhal_gurubose #aruppukottai_official #aruppukottai #chithiraithiruvizha2024 #festivelvibes❤️ #localnews #apknews #vibes

4/23/2024, 4:04:30 PM

கொடிக்கட்டு பணிகள் தீவிரம் 🥳🥳 #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #festivelfever

4/23/2024, 9:49:15 AM

அருப்புக்கோட்டையில் பிரசித்திப்பெற்ற ஆயிரங்கண்மாரியம்மன் திருக்கோவில் பங்குனித்திருவிழா தேர்தலை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டது... அதன்படி திருவிழா மே மாதம் முதல் தேதி ஆரம்பிக்க உள்ளது... இதற்கான கொடிக்கட்டி இன்று மாலை நடைபெற உள்ளது... பக்தர்கள் அனைவரும் வருகை தந்து அம்மனை தரிசித்து மகிழ வேண்டும்... #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #ayiramkanmariyamman #pangunipongal2024 #kodikattu2024

4/23/2024, 7:45:09 AM

உலகப்புகழ் பெற்ற சித்தர்களின் சொர்க்க பூமியான சதுரகிரி சுந்தரமகாலிங்கசாமி கோவிலில் நேற்று பிரசோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது… நேற்று காலை 6.30 முதலே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்… வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்வதை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்… மதியம் 12 மணி வரை சுமார் 2500 பக்தர்கள் மலையேறியதாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்… சுந்தரமகாலிங்க சுவாமிகளுக்கு நடந்த பிரதோஷ பூஜையில் பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்… #aruppukottai_official #aruppukottai #localnews #APKNEWS #sathurakiri #pirothosam

4/22/2024, 10:46:18 AM

தமிழ்நாட்டில் கடந்த 19 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது... இதில் 72 சதவிகித வாக்குகள் பதிவானதாக முதல் தேர்தல் ஆணையம் அறிவித்தது... பின்பு நள்ளிரவில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவானதாக மாற்றி அறிவித்தது... நேற்று தேர்தல் ஆணையம் மூன்றாவது முறையாக வாக்கு சதவிகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது... இதன்படி தமிழ்நாட்டில் தற்போது 69.72 சதவிகித வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது... நமது விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 70.32 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது... #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #election2024 #polling #finalout

4/22/2024, 9:40:58 AM

SBK 41 வது பொருட்காட்சி சில சட்டசிக்கல்களுக்கு பின்பு இந்த மாதம் துவங்கியது... ராட்டினங்கள், குதிரை சவாரி, பேட்டரி கார், குழந்தைகளுக்கான சறுக்கல்கள், குதித்து விளையாடுதல், போட்டிங், பந்து எறிதல், பேய் வீடு மற்றும் திரைப்படங்கள் , கலை நிகழ்ச்சிகள் என இவ்வளவு நாட்கள் நமக்கு பல பொழுதுபோக்கு அம்சங்களை தந்த பொருட்காட்சி இன்றுடன் முடிவடைகிறது... நேற்றே நல்ல கூட்டத்தை காண முடிந்தது... இன்றுடன் முடிவடைகிறது என்பதால் பார்க்காதவர்கள் ஒரு விசிட் அடிங்க மக்களே... #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #exhibition2024 #lastdate #todaylastday #jaintwheel🎡

4/21/2024, 6:11:16 AM

SBK பொருட்காட்சி சென்ற மக்கள் இதை கவனித்திருக்கலாம்… அனைத்து மின்விளக்குகளிலும் பச்சை கலரில் பிளாஸ்டிக் பைப்கள் இருக்கும்… இது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்வதை தடுக்க உதவும்… நாம் மற்ற மாநிலங்களில் இது போன்ற கோரவிபத்துக்களால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து வருவதை பார்த்திருக்கிறோம்… இந்த மாதிரி பிளாஸ்டிக் பைப்கள் இப்படிப்பட்ட ஆபத்துக்களை தடுக்க உதவும்… இந்த மாதிரி முன்னெடுப்புகளை கட்சி சார்ந்த கூட்டம் நடக்கும் போதும் திருவிழாக்கள் நடக்கும் போதும் கூட பயன்படுத்தலாம் என Aruppukottai Official அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #positivevibes #goodinitiative #nice

4/20/2024, 1:46:14 PM

அருப்புக்கோட்டையை உள்ளடக்கிய விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காலை 11 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்… 1. அருப்புக்கோட்டை - 22.64%, 2. திருப்பரங்குன்றம் - 24.88%, 3. திருமங்கலம் - 16%, 4. சாத்தூர் - 27.23%, 5. சிவகாசி- 23.98%, 6. விருதுநகர் - 24.71% மொத்தம் - 23.11% மக்களே வெயிலை பார்க்காமல் இன்று ஒரு நாள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை செய்வோம்… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #vote2024 #electionnews

4/19/2024, 11:58:48 AM

தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு SBK குழுமத்தின் பொருட்காட்சி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்க உள்ளது... வழக்கமாக 6 .30 க்கு ஆரம்பிக்கும் பொருட்காட்சியானது இன்று 7 .30 க்கு துவங்க உள்ளது... இன்று பொருட்காட்சி செல்லும் நம்முடைய மக்கள் இதற்கு ஏற்றார் போல பிளான் பண்ணிக்கோங்க... பி-கு அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #exhibitiontime

4/19/2024, 4:50:03 AM

அருப்புக்கோட்டையில் பிரசித்திப்பெற்ற ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்… தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதால் வருகின்ற மே மாதம் முதல் தேதியில் திருவிழா நடைபெற உள்ளது… இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது… அடுத்த திருவிழாவிற்கு ரெடியா மக்களே? பி-கு அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #devotional #pangunipongal2024 #ayiramkanmariyamman

4/18/2024, 2:24:31 PM

புதுக்கடை பஜாரில் இருந்து SBK பள்ளி செல்லும் பாதை மிக மோசமான நிலையில் இருப்பதை நாம் தொடர்ந்து பதிவு செய்து வந்தோம்… இந்த சூழ்நிலையில் தற்போது தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிசெய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #resolved

4/16/2024, 4:21:16 PM

சொக்கலிங்கபுரம் சிவன் கோவில் இது தான் நமது ஊர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அடையாளப்படுத்தப்படும் சொல் ஆகும்... மாறவர்ம சுந்தரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாத சிவன் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது... வருகின்ற ஜூன் 9 2024 வைகாசி 27 ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது... ஜூன் 10 2024 அன்று கொடியேற்றம் ஜூன் 19 2024 அன்று திருக்கல்யாணம் ஜூன் 20 2024 அன்று தேரோட்டம் மேற்கண்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளதால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது... பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… Pc : @oscarkalimuthu #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #meenatchichokkanathar #kumbabisekam #devotionalnews #lordsiva #sivankovil🙏 #maduraiupdates #Virudhunagar #Sivakasi #aruppukottai_quotes #arupppukottai_memes

4/16/2024, 6:49:45 AM

அருப்புக்கோட்டையில் பிரசித்திப்பெற்ற ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில் பங்குனித்திருவிழா வருகின்ற மே மாதம் முதல் தேதியில் நடைபெற உள்ளது… இதற்காக கொடியேற்றம் வருகின்ற 23 ம் தேதி நடைபெறகிறது… இவை அனைத்திற்கும் முன்னதாக முறைப்படி இன்று முகூர்த்தக்கால் நடத்தப்பட்டது,.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்… பி கு- அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #ayiramkanmariyamman #pangunipongal2024 #festivelvibes❤️ #devotional

4/15/2024, 10:35:23 AM

தமிழகத்தில் வருகின்ற 19 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தமிழக அரசு பொது விடுமுறை அளித்துள்ளது... இதைப்போலவே தனியார் நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது... இதனால் தமிழகம் முழுவதும் அன்றைய தேதியில் திரையரங்கத்தில் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது என திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது... பி-கு அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது... #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #election2024news #theatre #showcancelled

4/15/2024, 4:33:22 AM

🔵APKNEWS BEGINS AT 3:00PM ET / 12NOON PT #apknews #dancenews #entertainmentnews #hiphop #respect #fortheculture #explorepage

4/14/2024, 7:02:15 PM

அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் தேவாங்கா கலைக்கல்லூரி எதிரே ஆபத்தான நிலையில் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது… மூடப்படாமல் இருக்கிறது என்பதை விட எந்த வித அபாயக்குறியீடோ ஒரு தடுப்புத்தடையோ இல்லாமல் இருப்பது மிகவும் மெத்தனமான போக்கை காட்டுகிறது… சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என Aruppukottai Official கோரிக்கை வைக்கிறது… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #needaction

4/14/2024, 4:51:32 PM

சற்று முன் காரியாபட்டியில் ஜெயவிலாஸ் பேருந்து கண்ணாடி உடைப்பு முழு விபரம் தெரியவில்லை... #aruppukottai_official #aruppukottai #localnews #apknews

4/14/2024, 12:57:42 PM

மாறவர்ம சுந்தரபாண்டிய மன்னர் நமக்கு தந்த அருட்கொடையான சொக்கலிங்கபுர தெப்பம் சீரழிந்து இருப்பது பற்றி நாம் தொடர்ச்சியாக பதிவுகள் செய்து வந்தோம்… இதன் மூலம் ஏராளமான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது, மக்களும் குரல் கொடுக்க துவங்கினர்… நாம் தொடர்ச்சியாக பதிவு செய்ததன் விளைவாக தற்போது தெப்பத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது… இது Aruppukottai Official க்கு கிடைத்த வெற்றி இல்லை, நம்மோடு குரல் கொடுத்த அருப்புக்கோட்டை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்… இந்த சீரமைக்கும் பணிகளோடு சேர்த்து தெப்பத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் பார்க்காமல் அகற்றப்பட வேண்டும் என Aruppukottai Official கோரிக்கை வைக்கிறது… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #theppam #chokkanathar #sivankovil #repairwork #construction

4/13/2024, 8:34:41 AM

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது… ஆயிரங்கண் பானை நேர்த்திக்கடன் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்… நடந்து முடிந்த திருவிழாவில் பக்தர்கள் பல வகையான நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்… இதில் பொம்மை செலுத்துதல் என்பது நமது மக்களிடையே மிகவும் நம்பப்படுகின்ற நேர்த்திக்கடனாகும்… இந்த நேர்த்திக்கடனில் பல வித்தியாசமான பொம்மைகளை நம்மால் பார்க்க முடிந்தது… இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஆயிரங்கண் பானை நேர்த்திக்கடன்… பக்தர்களுக்கு மிகவும் கொடிய நோயில் இருந்தோ மிக மோசமான குடும்ப சூழ்நிலையில் இருந்தோ விடுவிப்பதற்காக இந்த ஆயிரங்கண் பானை நேர்த்திக்கடன் இருக்கிறார்கள்… இது மிகவும் துடியான கடுமையான விரதமாக கருதப்படுகிறது… இந்த நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற நாமும் பிரார்த்தனை செய்வோம் மக்களே… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #festivelnews #pangunipongal2024 #madurai #thiruviza

4/13/2024, 8:17:50 AM

அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் இருக்கும் பெத்தம்மாள் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவிலாகும்… மக்களை காக்கும் பெண் தெய்வமாகவும் எல்லையை காக்கும் எல்லையம்மனாகவும் காட்சியளிக்கும் கோவில் பெத்தம்மாள் கோவில்… நேற்று பெத்தம்மாள் கோவிலில் பங்குனிப்பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews Post: #aruppukottai_official #aruppukottai #localfestivel #photography #thiruvizha🔥 #festivelvibes❤️ #festivel #திருவிழா #மாரியம்மன் #mariyammantemple

4/12/2024, 9:59:50 AM

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனித்திருவிழாவின் 11ம் நாள் திருவிழாவாக தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது… திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது பங்குனி கடைசி வெள்ளியன்று நடைபெறுவது வழக்கம்… பக்தர்கள் அனைவரும் பொறுமையாக தேரோட்டத்தை பார்த்து வணங்கி மகிழுங்கள்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #festivelvibes❤️

4/12/2024, 7:35:40 AM

பாளையம்பட்டி முத்தாளம்மன் கோவிலில் நேற்று பங்குனித்திருவிழா கொண்டாடப்பட்டது… இதில் தீச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், மேலும் வெயிலுக்கு இதமான கம்மங்கூழ் கொடுக்கப்பட்டது… நம்மிடம் பலரும் முத்தாளம்மன் கோவில் பற்றி பதிவு செய்யுங்கள் என கோரிக்கை வைத்தனர்.. இரண்டு கோவில்களிலும் ஒரே நேரத்தில் நடந்தது இருந்தாலும் நாம் மக்களுக்காக கொண்டு செல்ல வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official கோரிக்கை வைக்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #pangunipongal2024 #Palayampatti #muthalamman

4/12/2024, 4:03:16 AM

🌹IN MEMORIAM | VALE - OJ SIMPSON Former NFL Player and Actor, OJ Simpson, Has Died after His Battle with Cancer. He was a Man who was Once at the Top of the World to Fallen Football Star After the Accusations of Murder of His Late Wife and A Man who was also Killed In the Early 1990s and was Acquitted for the Murders. He was never the same since. His Family Confirmed His Passing after a Battle of Cancer. He was 76 APKMEDIA Sends our thoughts and prayers for His Family and Friends of OJ Simpson #apknews #apkmedia #inmemoriam #ojsimpson #nfl #breakingnews #rip

4/11/2024, 5:05:08 PM

அருப்புக்கோட்டை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனித்திருவிழா களை கட்டியது… நேற்று பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில் திருவிழாவின் மிக முக்கிய அம்சமான தீச்சட்டி எடுத்தல் தற்போது துவங்கியது… அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த துவங்கியுள்ளனர்… சட்டி எடுத்து வரும் போது அவுங்க பக்தி பரவசத்தில் கத்தும் போது திருவிழாவின் உச்சக்கட்ட ஆனந்தத்தை நாம் உணர முடிகிறது… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #festivelfever #pangunipongal2024 #celeberation

4/10/2024, 7:22:59 AM

தமிழகம் முழுவதும் வருகின்ற 19 ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது... இதற்காக நேற்று அருப்புக்கோட்டையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி வகுப்பு பேரணி நடத்தினர்... இதன் மூலம் மக்கள் எந்தவித பயமின்றி வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்... இந்த கொடி வகுப்பு பேரணியை விருதுநகர் மாவட்ட எஸ் பி பெரோஸ்கான் அப்துல்லா துவக்கி வைத்தார்... பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது... #aruppukottai_official #aruppukottai #election2024 #paramilitary #localnews #apknews

4/9/2024, 8:01:59 AM

விருதுநகரில் பங்குனிப்பொங்கல் வருடாவருடம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்… இந்நிலையில் இந்த வருட பங்குனிப்பொங்கல் நாளை நடைபெற உள்ளது… இன்று காலை முதலே பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வருகின்றனர்… இதற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது… இதன்படி அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் நம்ம மக்கள் கருமாதிமடம் வழியாக ஆத்துப்பாலம் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்… விருதுநகர் செல்லும் நம்ம மக்கள் இதற்கு ஏற்றார் போல பயணத்தை மாற்றிக்கோங்க… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #Virudhunagar #takediversion

4/7/2024, 11:08:18 AM

ꜱʙᴋ 41𝘵𝘩 பொருட்காட்சி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களின் பொழுது போக்கு பசியை தீர்க்கும் வண்ணம் தொடங்கப்பட்டுள்ளது.... பல சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்கப்பட்டது... #aruppukottai_official #aruppukottai #sbk41th #exhibition2024 #localnews #apknews

4/7/2024, 3:25:15 AM

காலை விடிந்ததுமே ஆத்தாவின் தரிசனத்தை பார்ப்பதே பக்தர்களுக்கு அலாதி பிரியமாக இருக்கிறது… இன்று காலை தம்பதியினர் கரும்புத்தொட்டில் கட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்… கரும்புத்தொட்டில் கட்டி வழிபடும் முறையை பற்றி தெரிந்து கொள்ளுங்க மக்களே… குழந்தை வரம் இல்லாதவர்கள் ஆத்தாவிற்கு நேர்த்திக்கடன் வைத்து குழந்தை பிறந்த பின்பு கரும்புத்தொட்டிலில் பிறந்த குழந்தையை போட்டு கோவிலை சுற்றி வந்து குழந்தையின் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனை செலுத்துவதே ஆகும்… கரும்பில் விருத்தி அடையும் பண்பு உள்ளது, அதாவது மற்ற அனைத்திலும் இல்லாத குணம் என்னவென்றால் ஒரு விதை போட்டு அதில் ஒரு கனி வரும் என்பதற்கு பதிலாக கரும்பின் ஒவ்வொரு கணுவில் இருந்தும் ஒரு புது கரும்பு கிடைக்கும் என்பதை போல நமது வம்சம் சிறப்பாக விருத்தியடையும் என்பது ஐதீகம்… அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது #aruppukottai #aruppukottai_official #pangunipongal2024 #localnews #apknews

4/6/2024, 9:19:18 AM

ரொம்ப வருத்தம்பா... 🥹🥹 SBK 41 வது பொருட்காட்சி ரத்து செய்யப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக நிர்வாகம் அறிவித்தது… நிர்வாக நடைமுறை சிக்கல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது… மக்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது இருந்தாலும் அடுத்த வருடம் சிறப்பாக நடைபெறட்டும்… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #exhibitioncancelled

4/5/2024, 8:03:02 AM

🔵APKMEDIA INTERVIEW | DARKMATTER THIS SATURDAY On APKMEDIA Interview This Saturday, as the Wasteland SOUTHSIDE Krump event is counting down Under 7 DAYS Away, We will be Talking to One Krumper from the Former Texas Republic, Darkmatter ( @darkmatter.6tf_youngjvck ) On His views of the Krump Event coming up, His Team, The Krump Community in Texas and Dance Worldview that’s Changing its View on Krump. We will be LIVE on IG for this Interview At 5PM ET / 4PM CT / 2PM PT on APKMEDIA #apknews #apkmedia #interview #apkmediainterview #live #ig #explorerpage

4/4/2024, 11:13:05 PM

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது… இதில் இரண்டாம் நாளான நேற்று முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் காட்சியளித்தார்… இதை ஏராளமான பக்தர்கள் வணங்கி மகிழ்ந்தனர்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localfestivel #apknews

4/4/2024, 5:15:00 PM

அருப்புக்கோட்டை ஶ்ரீ முத்துமாரியம்மன் பங்குனிப்பொங்கல் திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது… முதல் நாளான நேற்று கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #pangunipongal2024

4/3/2024, 6:01:07 AM

பங்குனிப்பொங்கல் திருவிழா என்றாலே இந்த ஆலி பொம்மை ஆட்டம் தான் சின்ன வயசுல அவ்ளோ சந்தோசத்தை கொடுத்தது... இப்போ இருக்குற பிள்ளைங்களுக்கு எப்படின்னு தெரியல... ஆனா ஆலி பொம்மை வருதுன்னா இன்னைக்கும் நின்னு பார்த்து ரசிச்சுட்டு போறது பழக்கமாகிருச்சு... இன்றைய கொடிக்கட்டி முதல்நாள் விழாவிற்கு தயார் நிலையில் ஆலி பொம்மை இருக்கிறது... பி-கு அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது... #aruppukottai_official #aruppukottai #localfestivel #localnews #apknews #pangunipongal2024

4/2/2024, 12:36:32 PM

அருப்புக்கோட்டையில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனிப்பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது… உற்சவ மண்டபத்தில் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்கார ஊஞ்சலில் முத்துமாரியம்மன் காட்சி தருகிறார்… கொடியேற்றத்துடன் துவங்க உள்ள இந்த திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்… நமது மக்கள் அனைவரும் சென்று முத்துமாரியம்மன் அருள் பெறுக… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #pangunipongal2024

4/1/2024, 7:04:44 PM

SBK பள்ளியில் நடைபெறும் பொருட்காட்சி என்பது அருப்புக்கோட்டையின் மிக முக்கிய அடையாள பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்… இந்த வருடம் 41வது பொருட்காட்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது…. ஆனால் நிர்வாக சிக்கல் காரணமாக இன்னும் ஒரு வாரம் வரை தள்ளிப் போகிறது என்று தகவல்… வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது… எப்பொழுது ஆரம்பித்தாலும் ஏற்கனவே Schedule செய்த மாதிரி 22 நாட்கள் வரை நடைபெறும் எனவும் தகவல்… பொதுமக்களின் தங்களது பொழுதுபோக்கு நிகழ்வை காண இந்த வருடம் மேலும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழல் இருக்கிறது… எனவே அடுத்த தகவல் நாம் பதிவு செய்யும் வரை பொதுமக்கள் பொறுமை காக்க Aruppukottai Official கேட்டுக்கொள்கிறது… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #exhibition2024

4/1/2024, 3:58:16 PM

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை… நம்ம ஊரை பொறுத்தவரைக்கும் பங்குனிப்பொங்கல் கொடி கட்டிய உடனே மழை பெய்யும் என்பது ஐதீகம்… அடிக்கிற வெயிலுக்கு மழை பெய்து மக்கள் மனதையும் மண்ணையும் குளிர்விக்கட்டும்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #rainy #weathernews #localnews #apknews

4/1/2024, 8:32:11 AM

💙TO ALL THE WOMEN IN DANCE AND IN LIFE. FROM APKMEDIA TO YOU…🙏🏾🚺 THANK YOU #apknews #apkmedia #womenshistorymonth #women

4/1/2024, 3:58:30 AM

அருப்புக்கோட்டை அருகே இருக்கும் மல்லாங்கிணறு பேரூராட்சி திம்மன்பட்டி கிராமத்தில் குப்பைகளை இப்படி பாதுகாப்பில்லாமல் சாலைகளில் எரிப்பதை வழக்கமாக செய்கின்றனர்… அருகிலேயே பள்ளிக்கூடம் இருக்கிறது என்பதை கூட பொருட்படுத்தாமல் படிக்கும் குழந்தைகளுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது… சம்மந்தப்பட்ட நிர்வாகம் இதை தடுத்து நிறுத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என Aruppukottai Official கோரிக்கை வைக்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #mallankinaru #needaction

3/30/2024, 4:25:57 AM

🔴APKMEDIA RELEASES STATEMENT FOLLOW SEVERAL DAYS OF CHAOS BEHIND THE SCENES “THANK YOU TO EVERYONE WHO SHOWS LOVE TO THIS NEWS AGENCY FOR THEIR UNDERSTANDING OUR PURPOSE OF WHAT WE DO IN SUPPORT FOR THE DANCE & ENTERTAINMENT COMMUNITIES. DOING NEWS IN SUPPORT FOR THE CULTURE IS VERY TOUGH, BUT OUR DUTY IS TO UPLIFT, INSPIRE AND SHINE A LIGHT TO THE WORLD IN HONOR AND RESPECT. YES, WE HAVE MESS UPS HERE AND THERE, BUT WE DO OUR BEST TO MAKE THINGS RIGHT TO DO BETTER IN THE FUTURE. ” -JAMES APK #apkmedia #apknews #positivemessage #news #update #information #worldnews #dancecommunity

3/29/2024, 12:35:33 PM

Throwback- 2012 Era 💙 yes I been doing this for a Whole Minute. #tbt #apknews #newsanchor #broadcaster #dancecommunity #positivevibes #Blessed #LivingLife

3/28/2024, 7:03:31 PM

SBK பொருட்காட்சி நடைபெறுவது உறுதி… எந்த வித தடைகளும் இல்லாமல் வழக்கம் போல சிறப்பாக நடைபெறும்… எத்தனையோ வதந்திகள், தவறான செய்திகள் வெளிவந்த போதிலும் நாம் அது பற்றி கண்டுகொள்ளாமல் நிச்சயம் நடைபெறும் என நமது Followers களிடம் உறுதியாக சொன்னோம்… நாம் சொன்னபடியே நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே பொருட்காட்சி நடைபெற உள்ளது… எஞ்சாய் பண்ணுங்க மக்களே… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #exhibition2024 #sbk41th

3/27/2024, 3:28:13 PM

அருப்புக்கோட்டை நகராட்சியின் கவனத்திற்கு! பஜாரில் வடிவேல் முருகன் கோவில் தெருவில் வெகு நாட்களாக வாறுகால் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று @aruppukottai_official சார்பாக கேட்டுக் கொள்கிறோம். #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #needaction

3/26/2024, 11:53:27 AM

திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்கள் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்… இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசிக் அவர்களும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #mpelection2024

3/25/2024, 5:14:55 PM

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடை சற்று உயர்த்தப்பட உள்ளது… இதன் மூலம் சென்னை ரயிலில் இருந்து இறங்கும் வயதான பயணிகள் பயனடைவர்… அருப்புக்கோட்டை ரயில் நிலையம் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் முதலாக உருவாக்கப்பட்ட ரயில் நிலையம் என்ற பெருமையை மக்களிடம் கொண்டு சென்றதில் Aruppukottai Official பெருமைப்படுகிறது… நாம் இதை பதிவு செய்த போது பெரும்பாலான மக்களுக்கு இது தெரியவில்லை, நம்மிடம் இது உண்மையா? அப்படியா என ஆச்சர்யமாக கேட்டார்கள்.. சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட ரயில் நிலையம் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் என்பதை பெருமையோடு சொல்லுங்க… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #railwaynews

3/25/2024, 6:05:03 AM

“Been serious about this service for the Dance Community & entertainment since 2009. Been loyal, Working my heart on the Line to support everyone despite many who say I am not relevant, time and time again. And proved everyone wrong. It’s still the Beginning and I’ll continue fight for this community, til the end 💯” -JAMES APK #apknews #dancecommunity #reporter #anchor #broadcaster #danceworld #nevergiveup #fighttotheend

3/25/2024, 5:00:08 AM

“Been serious about this service for the Dance Community & entertainment since 2009. Been loyal, Working my heart on the Line to support everyone despite many who say I am not relevant, time and time again. And proved everyone wrong. It’s still the Beginning and I’ll continue fight for this community, til the end 💯” -JAMES APK #apknews #dancecommunity #reporter #anchor #broadcaster #danceworld #nevergiveup #fighttotheend

3/25/2024, 5:00:02 AM

இனிய இரவு வணக்கம் 🙏 #aruppukottai #aruppukotttai #localnews #apknews

3/24/2024, 6:26:59 PM

அருள்மிகு திருமேணிநாதர் திருக்கோயில், திருச்சுழி - திருத்தேர் வீதிஉலா @oscarkalimuthu #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #Thiruchuli #therthiruvizha2024

3/24/2024, 1:10:22 PM

அருப்புக்கோட்டையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தலைவர்களின் சிலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது… தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்… இதன்படி தலைவர்களின் சிலைகள் மூடப்பட வேண்டும்… அருப்புக்கோட்டையில் அண்ணா சிலை, எம்ஜிஆர் சிலை, காமராஜர் சிலை உள்ளது… அனைத்து சிலைகளும் கொடிக்கம்பங்களும் மூடி வைக்கப்பட்டுள்ளது… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #election2024news

3/24/2024, 5:30:16 AM

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு நடிகர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்… இந்நிலையில் பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளும் ஊட்டச்சத்து நிபுணரும் சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ் விஜயபிரபாகரன் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்… இவர்கள் இருவரும் பள்ளிப்பருவ நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews

3/23/2024, 12:20:42 PM

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது... இந்நிலையில் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லுரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, பூத்துகளில் பணிபுரிய உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி மையம், பாதுகாப்பு அம்சங்கள், CCTV கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு அவர்கள் பார்வையிட்டார்... இந்த நேரடி ஆய்வில் தாசில்தார் செந்தில்வேல் அவர்களும் உடனிருந்தார்... தேர்தல் நடத்துவது என்பது உண்மையிலேயே கடினமான வேலை தான்... பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது... #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #rdo

3/23/2024, 4:01:25 AM

அருப்புக்கோட்டைக்கு இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய அமைச்சர் உதயநிதி வருவதை தொடர்ந்து போக்குவரத்து மாற்றங்கள் இருக்கலாம்… அரசு தகவல்படி மாலை 5.30 க்கு சிவன்கோவில் வளைவில் பேசுகிறார்… தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது… இந்த சூழ்நிலையில் அருப்புக்கோட்டைக்கு முதல் ஆளாக திமுக அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது… இதுல ஹைலைட் என்னன்னா நாம் பல முறை மேடுபள்ளமா இருக்கு என பதிவு செய்த சிவன் கோவில் மேடு பள்ளங்கள் தற்போது அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்திற்காக சரிசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது… சரி மக்களுக்கு நல்லது நடந்தா சரி தான்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #election2024 #udhayanidhistalin

3/23/2024, 3:53:02 AM

🔴BREAKING NEWS | PRINCESS OF WALES The BBC Has Reported that Catherine, Princess Of Wales, Has Announced that she has been diagnosed with Cancer, She currently taking Treatment. She also tells many who are battling cancer, To have faith and never give up the fight. APKMEDIA Sends Our Deepest Thoughts and Prayers for Princess Kate and The Rest of the Royal Family through this difficult time. #apknews #breakingnews #princesskate #katemiddleton #cancerdiagnosis

3/22/2024, 8:01:20 PM

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது… இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னையும் பெங்களூரு அணியும் மோதுகின்றன… இந்திய நேரப்படி போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்… இந்த Tata IPL 2024 தொடரில் சில முக்கிய மாற்றங்கள்… அதாவது ஒரு ஓவருக்கு இரண்டு பௌன்சர்கள் வீச பௌலர்களுக்கு அனுமதி SRS (smart replay system) கொண்டு வரப்பட்டுள்ளது, இதன் மூலம் அதி நவீன 8 ஹேமராக்கள் மைதானம் முழுவதும் பொருத்தப்பட்டு அதில் எடுக்கப்படும் படங்களின் மூலம் ரன் அவுட், LBW என முடிவுகள் துல்லியமாக தரப்படும்… யாரெல்லாம் இங்க ஐபிஎல் ரசிகர்கள் இருக்கீங்க? கமண்ட்ல சொல்லுங்க மக்களே #aruppukottai #aruppukottai_official #ipl2024 #cricketnews #localnews #apknews #

3/22/2024, 2:15:40 PM

விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் 2019 ரிசல்ட் உங்கள் பார்வைக்காக... அருப்புக்கோட்டையை உள்ளடக்கிய விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் தொகுதிகளும் இதில் அடங்கும்... கடந்த 2019 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பலர் போட்டியிட்டனர், இருந்தாலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்கள் எண்ணிக்கையை தற்போது நாம் பாப்போம்... காங்கிரஸ் மாணிக்கம் தாகூர் - 470,883 தேமுதிக அழகர்சாமி - 316,329 அமமுக பரமசிவ ஐயப்பன் - 107,615 மநீம முனியசாமி- 57,129 நாதக அருள்மொழித்தேவன் 53,040 திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்... மேலே இருக்கும் வேட்பாளர்கள் அருப்புக்கோட்டையில் மட்டும் வாங்கிய ஓட்டுக்களை கீழே தனியாக பார்ப்போம்... காங்கிரஸ் மாணிக்கம் தாகூர் 62 917 தேமுதிக அழகர்சாமி - 47143 அமமுக பரமசிவ ஐயப்பன் - 15675 மநீம முனியசாமி- 7750 நாதக அருள்மொழித்தேவன்- 7423 இந்த முறை நாம் தமிழர் கட்சி மருத்துவம் படித்த கெளசிக் என்பவரை வேட்பாளராக அறிவித்துவிட்டது... காங்கிரஸ் மற்றும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு... நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #parlimentelection2019

3/22/2024, 10:30:00 AM

உலகப்புகழ் பெற்ற சித்தர்களின் சொர்க்கபூமியான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற உள்ளது… வருகின்ற 24ம் தேதி பௌர்ணமி வழிபாடும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளதால் இன்று 22-3-24 முதல் 25-3-24 வரை பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது… மலையேறி மகாலிங்க சாமி தரிசனத்தை பெற நினைக்கும் பக்தர்கள் இந்த தேதிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #LocalNews #apknews #sathuragiri #devotionalnews

3/22/2024, 6:51:30 AM

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது… இதன்படி 1 முதல் 9 ம் வகுப்பு வரை அனைவருக்கும் ஏப்ரல் 2 முதல் 12ம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தப்படும்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #holiday #tamilnaduschools

3/21/2024, 12:23:11 PM

தேர்தல் என்றாலே பரிசுப் பொருள் வழங்குதல், ஓட்டுக்கு பணம் வழங்குதல் என பல்வேறு விதி மீறல்கள் நடக்க கூடும். இதை தடுக்கும் பொருட்டு தான் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் புகார் செய்யும் புகார் மீது அடுத்த 100 நிமிடத்திற்குள் "நடவடிக்கை" எடுக்கப்படும் என்றும் புகார் கொடுத்தவர் அலைபேசி எண்ணிற்கு இது குறித்த விபரங்களும் பகிரப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பி.குறிப்பு : அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது. #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #cvigil #election2024 #electioncommison

3/21/2024, 8:53:18 AM

வியாழக்கிழமையன்று சாய்பாபா தரிசனத்திற்காக அவரது பக்தர்கள் காத்திருப்பது எல்லையற்ற அன்பை குறிக்கிறது… இன்று காந்திநகர் சாய்பாபா கோவிலில் காலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது… சாய்பாபாவின் பக்தர்கள் ஒவ்வொருவரும் அவர்களது விருப்பப்படி பிஸ்கட், பழம், பூக்கள் என சுவாமிக்கு கொண்டு வந்தனர்… மதியம் 1 மணியளவில் சிறப்பு அன்னதானமும், இரவு பூஜை முடிந்து கேசரியும் பிஸ்கட்டும் வழங்கப்படும்… பி-கு: அருப்புக்கோட்டை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென Aruppukottai Official அன்போடு கேட்டுக்கொள்கிறது… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #saibaba #Wednesday

3/21/2024, 8:18:18 AM

அருப்புக்கோட்டையில் திருச்சுழி சாலையில் அமர் மருத்துவமனை எதிரில் தற்போது Hero Showroom பாலவிநாயகா மோட்டார்ஸ் மெகா எக்ஸேஞ்ச் மேளா நடைபெற்று வருகிறது… இதில் ரொக்கத்தள்ளுபடி 3000ரூபாய் இருக்கிறது, மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த மெகா மேளா இன்று முதல் வருகின்ற வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது… தேவைப்படும் நம்ம ஊர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்… #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #balavinayagamotors

3/20/2024, 10:04:37 AM

தமிழகத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் களத்தில் இறங்கியது… ஏற்கனவே திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது… தற்போது அதிமுகவும் 16 தொகுதிக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது… இதன் மூலம் நமது விருதுநகர் தொகுதியில் அதிமுக திமுக மோதல் இல்லை என்பது உறுதியாகியுள்ளது… காங்கிரஸ் vs தேமுதிகvs நாம் தமிழர் vs பாஜக களத்தில் யார் முந்துகிறார்கள் என்பதை அடிக்கடி பதிவு செய்வோம்… #aruppukottai_official #aruppukottai #localnews #apknews #election2024 #mpelection

3/20/2024, 7:46:05 AM

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழாவில் இந்திய மக்களாகிய நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது... அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நமது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "நிச்சயம் வாக்களிப்பேன்" என்ற தலைப்பில் செல்பி ஸ்டாண்டினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் திரு ஜெயசீலன் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்... அனைவரும் வாக்களிக்க வேண்டும், இந்த முறையாவது 100 சதவிகிதம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று நம்புவோம்... இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மிக முக்கியமானது எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கபலகையில் மக்கள் அனைவரையும் கையெழுத்திட சொல்வது தான்... நல்லது நடக்கும் என்றே நம்புவோம்... அனைவரும் வாக்களிக்க வேண்டும் என Aruppukottai Official உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது... #aruppukottai #aruppukottai_official #localnews #apknews #vote2024

3/19/2024, 6:42:29 PM